ஒருவர் வாழ்க்கையில் அனைத்துக் காரியங்களும் சரியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும். ஆனால், சில நேரங்களில் சிறிதும் எதிர்பாராமல் தடைகள் உண்டாகும். எந்த காரியமும் சரியாக நடக்காது. இதற்கு அவருடைய ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கும்.
சர்ப்ப தோஷத்தில் பல வகைகள் உள்ளன. ஒருவர் ஜாதகத்தில் ராகு- கேதுவுக்கு இடையில் மற்ற கிரகங்கள் அனைத்தும் இடம்பெற்றுவிட்டால் அது காலசர்ப்ப யோகமாகும். (யோகம்- சேர்க்கை). இத்தகைய தோஷம் இருந்தால் குழந்தைகள் பிறப்பதில் பிரச்சினைகள் உண்டா கும். கணவன்- மனைவி உறவு சரியாக இருக்காது. எல்லா காரியங்களிலும் தடைகள் ஏற்படும்.
அனந்த காலசர்ப்ப யோகம்: லக்னத்தில் ராகு, 7-ல் கேது- அதற்கு மத்தியில் அனைத்து கிரகங்களும் அமைந்துவிட்டால் இந்த யோகம் உண்டாகும். அதன்காரணமாக வாழ்க் கையில் சந்தோஷம் இருக்காது. மனதில் பலவித பிரச்சினைகளும் ஏற்படும்.
குளிகை காலசர்ப்ப யோகம்: 2-ஆம் பாவத்தில் ராகு, 8-ஆம் பாவத்தில் கேது இருந்து, அதற்கு மத்தியில் மற்ற கிரகங்கள் இருந்தால், வாழ்க்கையில் பலவிதமான சிக்கல்கள் ஏற்படும்.
வாசுகி காலசர்ப்ப யோகம்:
ஜாதகத்தில் 3-ஆவது பாவத்தில் ராகு, 9-ஆவது பாவத்தில் கேது இருந்து, அவற்றுக்கு மத்தியில் பிற கிரகங்கள் இருந்தால், சகோதரர்களுக்கிடையே உறவு சரியாக இருக்காது. பலவித துன்பங்களுடன் வாழ்வார்கள்.
சங்கபால காலசர்ப்ப யோகம்: 4-ஆவது வீட்டில் ராகு, 10-ஆவது வீட்டில் கேது இருந்து, இவற்றுக்கு நடுவில் மற்ற கிரகங்கள் இருந்தால் கணவன்- மனைவி உறவு சரியாக இருக்காது. இல்வாழ்க்கையில் பல பிரச்சினைகள் ஏற்படும்.
பத்ம காலசர்ப்ப யோகம்: ராகு 5-லும், கேது 11-லும் இருந்து, மத்தியில் மற்ற கிரகங்கள் இருந்தால், குழந்தை பிறப்பதில் பிரச்சினைகள் இருக்கும். வாழ்க் கையில் பல கஷ்டங்கள் உண்டாகும்.
மகாபத்ம காலசர்ப்ப யோகம்: 6-ல் ராகு, 12-ல் கேது இருந்து, அவற்றுக்கு மத்தியில் பிற கிரகங்கள் இருந்தால், வாழ்க்கையில் பகை வர்கள் பலர் உண்டாவார்கள்.
தக்ஷத் காலசர்ப்ப யோகம்: 7-ல் ராகு, லக்னத்தில் கேது இருந்து, அவற்றுக்கு நடுவில் மற்ற கிரகங்கள் இருந்தால், கணவன்- மனைவி உறவு சரியாக இருக்காது.
கார்க்கோடக காலசர்ப்ப யோகம்: ராகு 8-ல், 2-ல் கேது- அவற்றுக்கு மத்தியில் பிற கிரகங்கள் இருந்தால், திருமணத்தில் பல தடைகள் உண்டாகும். தேவையற்றதைப் பேசி சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள்.
சங்கநாத காலசர்ப்ப யோகம்: ஜாத கத்தில் 9-ஆவது வீட்டில் ராகு, 3-ல் கேது இருந்து, அதற்கு மத்தியில் மற்ற கிரகங்கள் இருந்தால் வாழ்க்கையின் முற்பகுதியில் பல கஷ்டங்கள் உண்டாகும்.
பாதக் காலசர்ப்ப யோகம்: 10-ல் ராகு, 4-ல் கேது இருந்து, அவற்றுக்கு மத்தியில் பிற கிரகங்கள் இருந்தால் தாயன்பு கிட்டாது. கணவன்- மனைவி உறவும் சீராக இருக்காது.
விஷாக்தர் காலசர்ப்ப யோகம்: ராகு 11-ல், கேது 5-ல் இருந்து, அவற்றுக்கு மத்தியில் பிற கிரகங்கள் இருந்தால் குழந்தை பிறப்பதில் பிரச்சினை ஏற்படும்.
சேஷநாதி காலசர்ப்ப யோகம்: 12-ல் ராகு, 6-ல் கேது இருந்து, அவற்றுக்கு மத்தியில் பிற கிரகங்கள் இருந்தால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும்.
பரிகாரங்கள்
பாம்பிற்குப் பூஜை செய்யவேண்டும். நாக பஞ்சமியன்று பூஜை செய்வது நல்லது. பாம்புப் புற்றுக்குப் பால்வார்க்க வேண்டும்.
சந்திர கிரகணத்தன்று வெள்ளியில் பாம்பு உருவம் செய்து, அதற்குப் பூஜை செய்ய வேண்டும். வெள்ளியால் செய்யப்பட்ட இரண்டு பாம்பு உருவங்களை நீரில் விடவேண்டும்.
தினமும் சிவனின் மகாமிருத்யுஞ்ஜய மந்திரத்தைக் கூறுதல் நன்று.
காலையிலும் இரவிலும் சிவனுக்கு அபிஷேகம் செய்யலாம்.
பிறந்த நட்சத்திரத்தன்று சிவனுக்கு பால், நீர், சிவப்பு மலர்களால் அபிஷேகம் செய்வது நற்பலன் தரும்.
வீட்டில் ருத்ராபிஷேகம் செய்வது சிறந்த பரிகாரம்.
செல்: 98401 11534
சந்திராஷ்டம தினங்கள்
மிதுனம்: 6-1-2019 இரவு 11.45 மணிமுதல் 9-1-2019 பகல் 12.30 மணிவரை சந்திராஷ்டமம். மனக்குழப்பம், வீண்விரயம், கற்பனை பயம், நண்பர்களிடையே மனவருத்தம் போன்ற பலன்களைச் சந்திக்கநேரலாம். அலுவலகத்தில் பணிபுரிபவர்களால் ஆதரவு உண்டாகும். காரியத்தில் தாமதம் ஏற்பட்டாலும் தடைநேராது. எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியமானதாகும். லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.
கடகம்: 9-1-2019 பகல் 12.30 மணிமுதல் 11-1-2019 இரவு 11.45 மணிவரை சந்திராஷ்டமம். வேலை அல்லது உத்தியோகத்தில் சிறுசிறு பிரச்சினைகளும் சங்கடங்களும் எழலாம். பழகிய வட்டாரத்திற்குள் பிளவை உண்டாக்க சிலர் முயற்சிக்கலாம். அதற்கு இடம்தராத வகையில் அனுசரித்து, பொறுமையுடன் செயல்பட்டால் பிரச்சினைகளைத் தடுக்கலாம். தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சக்கரத்தாழ்வாரை வழிபடவும்.
சிம்மம்: 11-1-2019 இரவு 11.45 மணிமுதல் 14-1-2019 காலை 9.30 மணிவரை சந்திராஷ்டமம். புது முயற்சிகளைத் தள்ளிப்போடவும். புதிய முதலீடுகளையும் ஒத்திப்போடவும். வேலையில் டென்ஷன், கவலை உண்டாகலாம். பொருளாதாரத்தில் சிறுசிறு தொல்லைகளைச் சந்திக்கநேரும். கணவன்- மனைவிக்குள் சங்கடங்களையும் சஞ்சலங்களையும் ஏற்படுத்தலாம். விநாயகர் கவசம் பாராயணம் செய்யவும்.